அரசகேசரி
நீர்வேலிக் கிராமத்தின் நடுநாயகமாகவிளங்கி அருள்பாலித்துக் கொண்டிருப்பதே அரசகேசரிப் பிள்ளையார் ஆலயமாகும். செம்மண் பிரதேசத்தில் அமைந்தால் இவ்வாலயத்தைச் செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் என்றும் வழங்குவதுண்டு.யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்து வந்த தமிழ் அரசர்கள் நல்லூரில் இராசதானி அமைத்ததோடு நல்லூரில்லிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தின் பலபாகங்களுக்கும் போக்குவரத்து செய்வதற்கான வீதிகளையும் அமைத்தனர்.இந்தவகையில் நல்லூரிலிருந்து இருபாலை, கோப்பாய், நீர்வேலி ,சிறுப்பிட்டி, நவக்கிரி ஆகிய கிராமங்களுக்கூடாக அச்சுவேலிக்குச் செல்லும் வீதி அமைகின்றது. இதனாலேயே இந்த வீதி “இராச வீதி” என்று அழைக்கப்படுகின்றது.அக்காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்த பாராஜசேகரனின் இளையமகனான பண்டாரம் மன்னனின் முதன் மந்திரியாக இருந்த அவரது மாமனாரான அரசகேசரி என்பவர் இந்த இராசவீதி வழியிலே ஒரு விசேடமான இடம் இருப்பதாகவும், அந்த இடத்தில் ஒரு தான் தோன்றியான தீர்த்தம் இருப்பதாகவும் கனவு கண்டார்.அடுத்த நாளே அதைப்பற்றி ஆராயும் பொருட்டு தான் கனவு கண்ட இடத்துக்கு வந்து ஆராய்ந்தபோது தான் கண்ட கனவின்படி அங்கு புனிதமான அந்த நீரூற்றைக்கண்டு வியந்து அதிசயப்பட்டார். அந்த ஊற்றிலிருந்து வெளிப்படும் தீர்த்தமானது அமிர்தம் போலவும், நல்லநீர்ப் பெருக்கோடும் இருப்பது கண்டு ஆனந்தப்பட்டார்.இவ்வாறு தீர்த்த அமைப்புள்ள இடத்தில் ஆலயம் அமைப்பதே அரசமரபு எனக்கருத்திற்கொண்டு அப்புண்ணிய தீர்த்தத்தை திருமஞ்சனமாகக் கொண்டு ஒரு விநாயகப்பெருமானுக்குரிய ஆலயமமைத்து பிரதிஷட்டை செய்தார். அரசகேசரி என்ற மந்திரியால் 16 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டதால் இவ்வாலயம் அரசகேசரிப் பிள்ளையார் கோவில் என வழங்கப்படலாயிற்று. இவ்வாலயம் மிகவும் புராதனமான ஓர் ஆலயம் என்பதற்கு மிகப்பழைய புராதன ஆலயங்கள் என்ற பதிவேட்டில் இவ்வாலயத்தின் பெயரும் பதிவாகியுள்ளமை ஒரு சான்றாகும்.
ஆலய வரலாறு
அடுத்த நாளே அதைப்பற்றி ஆராயும் பொருட்டு தான் கனவு கண்ட இடத்துக்கு வந்து ஆராய்ந்தபோது தான் கண்ட கனவின்படி அங்கு புனிதமான அந்த நீரூற்றைக்கண்டு வியந்து அதிசயப்பட்டார். அந்த ஊற்றிலிருந்து வெளிப்படும் தீர்த்தமானது அமிர்தம் போலவும், நல்லநீர்ப் பெருக்கோடும் இருப்பது கண்டு ஆனந்தப்பட்டார்.இவ்வாறு தீர்த்த அமைப்புள்ள இடத்தில் ஆலயம் அமைப்பதே அரசமரபு எனக்கருத்திற்கொண்டு அப்புண்ணிய தீர்த்தத்தை திருமஞ்சனமாகக் கொண்டு ஒரு விநாயகப்பெருமானுக்குரிய ஆலயமமைத்து பிரதிஷட்டை செய்தார். அரசகேசரி என்ற மந்திரியால் 16 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டதால் இவ்வாலயம் அரசகேசரிப் பிள்ளையார் கோவில் என வழங்கப்படலாயிற்று. இவ்வாலயம் மிகவும் புராதனமான ஓர் ஆலயம் என்பதற்கு மிகப்பழைய புராதன ஆலயங்கள் என்ற பதிவேட்டில் இவ்வாலயத்தின் பெயரும் பதிவாகியுள்ளமை ஒரு சான்றாகும்.
வள்ளல் வயல் நீர்வேலி வாழும் மூர்த்தி
ஆர்பூத்த சடை அரசகேசரிப் பேர்
அத்திமுகப்பிள்ளை மலரடி காப்பாமே”
ஆலயப் பெயர்: அரகேசரிப்பிள்ளையார் கோயில்.
இருக்குமிடம்: நீர்வேலி தட்டுப் பகுதி (காணிப் பெயர்)
யரால் கட்டப்பட்டது: அவ்வூர் மக்களால் கட்டப்ட்டது.
இப்போ நிர்வகிப்பவர்: குமருப்பிள்ளை சுவாமிநாத விசுவிழா நடைபெறும் மாதம்,விபரம்: ஆவணி 9 நாட்கள் சுவாமியைக் காவி வீதி வலம் வருதல் ஒரு நாள் தேர்
நாடெல்லாம் ஆலயம் அமைத்து, ஆன்மீக வாழ்விற்கு வழிகாட்டிச் சிறப்புடன் வாழ்ந்தனர் எம் ழுன்னொர். அவர்கள் எமக்கென விட்டுச் சென்ற பழம்பெரும் பாரம்பரியங்களை அருமையாக பேணிப் பொழிவுறத் காப்பது எம் தலையாய கடமை அன்றோ! இவ்வுணர்வினையே மாககவி பாரதியாரும் தம் பாடல் ஒன்றில்!
“எந்தையும் தாயும் பிறந்து, வளர்ந்து இருந்தது இந்த நாடே அவர் முந்தையராயிரம் அண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்தநாடே அவர் சிந்தனையில் ஆயிரம் எண்ணமிளிர்ந்து சிறந்தும் இந்தநாடே அதைவந்தனை மனதிலிருந்தி என் வாயுற வாழ்த்தேனோ
இதை வந்தேமாதரம், வந்தேமாதரம் என வாழ்த்தி வணங்கேனோ”
என எடுத்தியம்பியமை எம் உள்ளத்தை உருவாக்கின்றது.
எம் கிராமத்தின் கண், நடுநாயகமாய் எழுந்தருளிய அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அரசகேசரிப் பிள்ளையார் ஆலயழும் பழமை, பெருமை, புதுமைக்குரியது. இன்று அதன் புனித மாக கும்பாபிஷேகப் பெருவிழா கோலாகலமாக நடைபெறுகின்றது. இந் நு}ற்றாண்டில் இப் புண்ணிய நிகழ்வு நான்காவது முறையாக நிகழ்கின்றது. முன்னைய விழாக்கள் முறைறே 1932, 1951, 1951 ஆகிய ஆண்டுகளிள் இனிதே நிகழ்ந்தன.
எம் மானிலத்தின் தொண்மையான 12 சைவ ஆலயங்களில் இதுவுமொன்றெனத் தரமான வரலாற்று நு}ல்கள் சான்று பகருகின்றன. இதன் ஸ்தாபிதம் 16ஆம் நு}ற்றாணடின் பிற்பகுதியில் அல்லது 17ஆம் நு}ற்றாணடின் முற்பகுதியில் அமையப்பட்டதென அறியப்படுகின்றது. மேலும் 1792 இல் அன்றைய அரசரின் ஆலயப் பதிவேட்டில் இவ்வாலயம் விபரங்களும் உள்ளன, எது எவ்வாறாக மிகத் தொன்மைமிக்கது. அற்புதமானது. அடியவர்களுக்கெலாம் கண்கண்ட தெய்வமாய், அன்னவர் குறைகளைந்து அருள் சுரக்கும் ‘ கற்பகம் “ ஆனது.
ஆலயத்தின் திருமஞ்சன தீர்த்தம் தான்தோன்றியானது. அவ்விசேடத்தை விளக்கும் வகையிலேயே பிள்ளையாரின் திருவுருவம் எழுந்தருளப்பட்டதாகும், தீர்த்தக்கிணற்றின் அமைப்பு, உருவம், ஆழம், நீரின் புனிதம் ஆகியவற்றினை பார்ப்போர் சுவைப்போர் வியந்தே நிற்பர்.
தமிழ் மன்னன் பரராசசேகரன் மைத்துனன் மன்னன் பண்டாரத்தின் முதன் மந்திரி அரசகேசரிக்கும் இவ்வாலயத்திற்கும் ஏதோ ஒருவiயில் இறுகிய தொடர்பின் காரணமாகவே இதனை ‘ ஸ்ரீ அரசகேசரிப் பிள்ளையார் “ என அழைக்கப்பெற்றதென ஒரு கர்ணபரம்பரைக் கதையுமுண்டு.
ஆலய பரிபாலனம் அதன் ஆரம்பம் முதல் 1879 வரை வழிபாடற்றியோராலும் 1880 – 1893 வரை அமரர் ஸ்ரீ மான் கதிர்காமர் ஐயம்பிள்ளையென்ற சிவபுண்ணிய சீலராலும், 1894 – 1903 வரை அக்கால ஆலயக் குருவினாலும், 1904 -1906 வரை ‘ அப்பாசாமிக்குரு “ என மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஆலயக்குரு, சிவஸ்ரீ சுவாமிநாத – இராமசாமிக்குருக்களாலும் பல்வேறு இடர்கள், தளர்வுகள் மத்தியிலும் பரிபாலிக்கப்பட்டு குருக்கள் அவர்கள் 1947இல் அமரரானதும் ஆலயப பொறுப்பினை 1949இல் சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட அறங்காவல் சபையினரிடம் ஒப்படைக்கபெற்று அன்று முதல் இன்றுவரை காலத்திற்குக் காலம் தெரிவு செய்யப்படும் பரிபாலன சபையினர் ஆலயத்தின் பரிணாம வளர்ச்சியில் அதன் பழமை குன்றாது பல, பல, புனித, புதிய பணிகளை சிறப்புடன் ஆக்கி வருவதை பலருமறிவர்.
சைவ ஆலயங்களில் நிகழும் சகல சிறப்பு விழாக்களுடன், வருடாந்த உற்சவம் ஆண்டுதோறும் ஆவணிச் சதுர்த்தியன்று கொடியேற்ற விழாவுடன் ஆரம்பமாகி பத்து தினங்கள் பெருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று பௌர்ணமி தினத்தில் தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெறும். ஆலயப் பிரதம சிவாச்சாரியாராக சிவஸ்ரீ கார்த்திகேய சாம்பசதாசிவக் குருக்களும் அவரின் புத்திரர் சிவஸ்ரீ சோமதேவக் குருக்களும் தம் தந்தையாருக்குத் துணையாயுமிருந்து தம் அரனார் தொண்டினைப் பக்தி சிரத்தையுடன் ஆற்றி வருகின்றனர்.
இவ் அறப்பணிக்கு அடியார் திருக்கூட்டமும் கொடை வள்ளல்களும் மூலவேராக அமைத்து, காலந்தோறும் கண் துஞ்சாது கருமமே கண்ணாய் நின்று கணபதிக்கன்பு செய்து தொண்டாற்றிய வண்ணமிருக்கின்றனர்.
இவ்வேளை, சீலமிகு சீர்த் திருத்தெண்டாற்றி இறைபதமடைந்த இனியவர்களையும் நாம் நன்றி உணர்வுடன் நினைவு கொள்வோமாக. விநாயகர் திருத்தொண்டில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த முன;னைய முகாமையாளர்கள், அறங்காவல் உறுப்பினர்கள் அவர் தம் பணிகளை உளமார வாழ்த்திப் போற்றும் வேளை அலயத்தின் பாரிய பணிகளில் அவற்றையெலாம் அசுர வேகத்தில் நீதி, நிதானம் தவறாது தன் அபார ஆளுமையுடன் 1959 இல் கோபுர மண்டபமைத்தும், தென்னிந்திய சிற்பாசாரிகளைக கொண்டு வியப்புமிகு சித்திரத் தேரினை 1967 இல் உருவாக்கியும், நந்தவனமமைத்து பழைய வாகனங்களைப் புதிக்கியும், புதியன பல ஆக்கியும், மேலும் ஆலயத் தேர்மண்டபம் போன்ற பல தரப்பட்ட பணிகளை எவரும் ஏவாவண்ணம் உழைத்து இவற்றிற்கெல்லாம் வேண்டிய நிதியினைப் பெற இந்திய முன்னனிப் பாடகர்களை அழைத்து இலங்கையின் பல பாகங்களில் இன்னிசை நிகழ்வுகள் நடத்தி நிதி திரட்டியும் பக்தகோடிகளின் அன்பளிப்புடனும் குறிப்பாக கொடை வள்ளல் மலாயன் பென்சர் அமரர் ஸ்ரீமான் காசிப்பிள்ளை செல்லையாவினது பாரிய நிதி உதவியுடனும் சித்திர வேனலப்பாடுகளுடன் கூடிய பிள்ளையாரின் இரதத்தை பலரும் வியக்கும் வகையில் அமைக்க உழைத்த அமரர் கனகசபாபதி வேலுப்பிள்ளை கனகரத்தினம், சமாதானநீதிவான், போன்றவர்களின் தொண்னை எம் சமூகம் என்றுமே போற்றக் கடைப்பாடுடையது.
1992 இல் முருகப்பெருமானுக்கும் இரதமொன்றினை அடியவர் பொருளுதவியுடன் தன் முழு நேரத்னதயும் அர்ப்பணித்து முடித்த பெருமைக்குரிய, அறங்காவல் சபையின் செயலாளர் அமரர் வேலுப்பிள்ளை சின்னத்தம்பியின் தொண்டினையும் நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.
ஆலயம் அருள் பொழிய, அடியவர் பால் அனுக்கிரகிக்க முப்பொதும் திருமேனி தீண்டி, நித்திய நைமித்திய தொண்டினைப் பக்தர்கள் பரவசமடையுமாறு தொண்டாற்றும் அந்தணப் பெரியோர்களையும் காலை, மாலை, உச்சிதோறும் தம்மை மறந்து தொண்டாற்றும் பக்தர்களையும், கரம் கூப்பி வணங்குவோமாக.