SOND நிறுவனம் நீர்வேலி விவசாயிகளுக்கு பரிசு வழங்கியுள்ளது
நீர்வேலி வாழைத்தோட்ட விவசாயிகள் சேதன முறையில் பயிர்செய்கை மேற்கொண்டமையை ஊக்குவித்து SOND நிறுவனம் அவ்விவசாயிகளுக்கு பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்துள்ளது. மேற்படி நிகழ்வானது கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் SOND நிறுவனத்தினைச் சேர்ந்த அதிகாரிகளும் அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். சேதன முறையில் ஈடுபடும் வாழைத்தோட்ட விவசாயிகள் பலருக்கு இக்கௌரவிப்பு வழங்கப்பட்டது.(மேலதிக படங்களை பார்வையிட இங்கே கிளிக் செய்க)
0 Comments