newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

காலத்தால் அழியாதவை

நெருக்கடி நேரங்களில் உயர்சேவை புரிந்தவர்களுக்கு நன்றிகள்

எமது இணையத்தின் ஏற்பாட்டில் ஊரடங்கு காலத்தில் வசதி குறைந்த நீர்வேலி மக்களுக்கு உதவி புரிய முற்பட்ட போது எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் சேவை அடிப்படையில் எம்முடன் இணைந்து   சமூக சேவையாளர்கள் சேவையாற்றினார்கள்.மேற்படி  உயர் சேவை புரிந்தவர்களான திரு.சி.கணபதிப்பிள்ளை (சீனா அண்ணை)   திரு.பொ.பவானந்தன் ஆசிரியர் மற்றும் இளைஞர்களான அருந்தவகுமார் கீதமன் – சிவசுப்பிரமணியம் தனுராஜ் – லோகிதன் பிரியந்தன் – நடராசா ஜதீசன் -காங்கேசன் விபுலன்  ஆகியோரினை பாராட்டுவதுடன் இணையம் சார்பாக உளங்கனிந்த  நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் வாசிக்க

மரணஅறிவித்தல் -அமரர் திரு.வே.செல்லையா (சலூன் உரிமையாளர்)

மாவிட்டபுரத்தினை பிறப்பிடமாகவும் கரந்தன் வீதி நீர்வேலி தெற்கு நீர்வேலியை விசிப்பிடமாகவும் கொண்ட திரு.வே.செல்லையா(சலூன் உரிமையாளர்) 24.05.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று  காலமானார்.  40 ஆண்டுகளுக்கு மேலாக கரந்தன் வீதியில் வெங்காயச்சங்கத்திற்கு அருகில் சலூன் அமைத்து அதில் நீர்வேலி மக்களுக்கு அளப்பரிய சேவைபுரிந்துள்ளார். அமரர் திரு.செல்லையாவினை அறியாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு தனது சேவையினை நீர்வேலி மக்களுக்கு நீண்டகாலமாக ஆற்றியிருந்தார். கடந்த போர்க்காலங்களிலும் மிகுந்த சிரமத்தின் மத்தியிலும் வசதிகுறைந்த நேரத்திலும் மாவிட்டபுரத்தில் இருந்து  தனது சேவையினை நீர்வேலி மக்களுக்கு ஆற்றியிருந்தார். செல்லையா அவர்களின் இழப்பு நீர்வேலி தெற்கு மக்களுக்கு கவலையளிக்கும் .ஆழ்ந்த அனுதாபங்களை அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். மேலும் வாசிக்க

நீர்வேலியில் காற்றினால் வாழைகள் முறிந்து நாசமாகின

21.05.2020 வியாழக்கிழமை நீர்வேலியில் வீசிய பலமான காற்றினால் வாழைகள் முறிந்து நாசமாகின. நீர்வேலியின் கரந்தன் மாசிவன் மற்றும் அச்செழு சிறுப்பிட்டி ஆகிய இடங்களில் பெருமளவு வாழைகள் முறிந்து நாசமாகின. அண்மையில்  கொரணா ஊரடங்கினால் வாழைக்குலைகளை விற்க முடியாமல் இருந்தனர் .தற்போது ஒரளவு அதிலிருந்து மீண்டுவந்து இதரை வாழை 45 ரூபா வரையிலும் கதலி 35 ரூபா வரையிலும் விற்கப்பட்டு  வந்துள்ள நிலையில் காற்றின் இன்றைய அழிவு பெரும் நட்டத்தினை ஏழை விவசாயிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாசிக்க

முதியவர்களுக்கான இணையத்தின் 2ம் கட்ட உதவி

நியூ நீர்வேலி இணையத்தின் ஊடாக நீர்வேலியைச் சேர்ந்த 80 முதியவர்களுக்கு ரூபா 1200 பெறுமதியான உணவுப்பொதிகள் 21.05.2020 வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் நீர்வேலி தெற்கு ஸ்ரீ சுப்ரமணிய சனசமூக நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது. நீர்வேலி தெற்கு நீர்வேலியைச் சேர்ந்த சுவிஸில் வதியும் திரு.பொன்னையா நடேசபிள்ளை அவர்களின் பேரன் நிக்கோ அவர்கள் ரூபா 100 000 இனை வழங்கியிருந்தார். அவரின் கருணை உள்ளத்திற்கு எமது இணையம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது. மேலும் வாசிக்க

நீர்வேலி இணையத்தின் ஏற்பாட்டில் உதவி

நீர்வேலி இணையத்தின் ஏற்பாட்டில் நீர்வேலி தெற்கு ஸ்ரீ சப்பிரமணிய சனசமூக சுற்றாடலில் உள்ள உதவி தேவைப்படும் மக்களில் 28 பேருக்கு  ரூபா 15 00 வீதம் 28 குடும்பங்களிற்கு 19.05.2020 செவ்வாய்க்கிழமை ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது. இதற்குரிய அனுசரனையினை கனடாவில் வதியும் நீர்வேலி தெற்கு நீர்வேலி என்ற முகவரியினைக் கொண்ட மயில்வாகனம் தவயோகராசா அவர்கள் 42 000 ரூபாவினை வழங்கியிருந்தார். இவரின் கருணை உள்ளத்திற்கு நீர்வேலி இணையத்தின் சார்பில் நன்றிகள் மேலும் வாசிக்க

நீர்வேலி காமாட்சி அம்பாள் ஆலய தொண்டர் சபையினரால் உதவி

நீர்வேலி காமாட்சி அம்பாள் ஆலய தொண்டர் சபையினரால் நீர்வேலி, புத்தூர் , அச்செழு பூலசிட்டி ஆகிய பகுதிகளில் கொரனா வைரஸ் பாதிப்பினால் வருமான இழப்படைந்த சுமார் 165 குடும்பங்களிட்கு புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் 3ம் கட்ட உலர் உணவு விநியோகிக்கப்பட்டது மேலும் வாசிக்க

நீர்வேலி இணையத்தின் ஏற்பாட்டில் முதியவர்களுக்கான உதவி

நீர்வேலி தெற்கு நீர்வேலி குருந்தடி வீதியைச் சேர்ந்த நோர்வே நாட்டில் வதியும் இராமநாதன் தயானந்தன் தனது மறைந்த தந்தையார் வேலுப்பிள்ளை இராமநாதன் ஞாபகார்த்தமாக 08.05.2020 வெள்ளிக்கிழமை 40 தெரிவு செய்யப்பட்ட முதியவர்களுக்கு உணவுப்பொருட்களினை நீர்வேலி இணையத்தினூடாக வழங்கினார். ஒருவருக்கு 1250 ரூபா பெறுமதியான முதியவர்களுக்குரிய அத்தியாவசியப்பொருட்களினை இணையத்தினை சேர்ந்த இளைஞர்கள் முதியவர்களினுடைய வீடுகளிற்கு நேரடியாகச் சென்று வழங்கினர். நிதியுதவி புரிந்த திரு.இராமநாதன் தயானந்தன் அவர்களுக்கும் அரும் பெரும் சேவையாற்றிய இளைஞர்களுக்கும் எமது இணையம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது. மேலும் வாசிக்க